நான் உன்னிடம்
பேசாமல் விட்ட
வார்த்தைகளும்
நீ என்னிடம்
பேசாமல் விட்ட
வார்த்தைகளும்
இப்போது பேசிக்கொள்கின்றன
நம்மைப்பற்றி!
வார்த்தைகள்…
August 22, 2009 by veerakumarகாதலன்-கணவன்…
August 22, 2009 by veerakumarஎன்
மல்லிகை வாசமும்
பவுடர் வாசமும்
மட்டும் உணர்ந்திருந்த
அந்த நாட்களில்
தேவதை என்றவன்
என்
அக்குள் வியர்வை
எச்சில் சுவை
எல்லாம் உணர்ந்தபின்
சொல்கிறான்
சனியனே!
உனக்காக மட்டும்…
July 30, 2009 by veerakumarஎன்னைப் பற்றி
உனக்கு
எதுவுமே தெரியாது
என்கிறாய்
உண்மைதான்
உன்னைப் பற்றி
எனக்கு அவ்வளவாக
தெரியாதுதான்
ஆனால்
உன்னால் தான்
வாழ்க்கையை பற்றி
நான் தெரிந்துகொண்டேன்
உனக்காக மட்டும்…
July 30, 2009 by veerakumarஉனக்கு
கவிதைகளில்
அதிகம் ஈடுபாடு
இருந்ததில்லை
என் தமிழ்கூட
புரியவில்லை
என்று எப்போதோ
சொல்லியதாக
ஞாபகம்
இருந்தும்
உனக்கு கடிதம்
எழுதுவதை
ஒரு கடமையாகவே
வைத்திருந்தேன்
என்னை உனக்கு
ஞாபகப்படுத்த
நான் எழுதிய
கடிதங்களை
என்ன செய்தாய்
என்பது
தெரிய வேண்டும்
உன் வீட்டு
குப்பை கூடையை
கேட்டால் தெரியுமா?
உனக்காக மட்டும்…
July 30, 2009 by veerakumarஏதாவது காரணம்
கண்டுபிடித்து
என்னை வெறுத்துவிடு
என்றாய்
சிரிப்புதான்
வந்தது
உன்னை எதனால்
நேசிக்கிறேன்
என்பதற்கே
காரணம்
கண்டுபிடிக்க முடியாத
நான்
உன்னை வெறுப்பதற்கு
ஒரு காரணத்தை
எப்படி கண்டுபிடிப்பேன்?
உனக்காக மட்டும்…
July 13, 2009 by veerakumarகாற்று
செடியில் இருக்கும்
பூவை
அசைக்கும் போதெல்லாம்
எனக்கு
ஞாபகம் வரும்
உன் நடனம்
ரோட்டோரம்
அறுந்து கிடக்கும்
அந்த ஒற்றை
செருப்பை
பார்க்கும் போதெல்லாம்
எனக்கு ஞாபகம்
வருகிறது
உனக்கான என்
நேசம்
உனக்காக மட்டும்…
July 9, 2009 by veerakumarமனசுக்குள்
மல்லிகை கொடியாய்
உன் நினைவுகளை
படர விட்டு
உனக்கு சொல்லியனுப்ப
நினைத்திருந்தேன்
நீ ஒரு புயலை
அனுப்பினாய்
புயல் வந்துவிட்டு
போன பிறகுதான்
என் தவறு
எனக்கு புரிந்தது
Interests…
July 9, 2009 by veerakumarகுழந்தை
அதன் அம்மாவின் கன்னம்!
கவிதை
பறிக்கப்படாத ரோஜா
பனித்துளி
சாயங்கால மழை
நகரும் மேகங்கள்
என் ஜன்னலில் தெரியும் நிலா
அதிகாலை சூரியன்
காற்றில் அடும் தீபம்
தூரத்து மலை தொடர்
நடுஇரவு நிசப்தம்
பொட்டைவெளியில் ஒற்றை பனை மரம்
தொண்டைக்குள்ளிருந்து உணவு கக்கி குஞ்சுக்கு ஊட்டி விடும் தாய் காகம்
சுல்லென்ற வெய்யில்
காகித கப்பல்
கண்ணாடி வளையல்
தெருச்சண்டை
மஞ்சள் பூசிய முகம்
சலங்கை
அரசமரத்து விழுதுகள்
தப்பான கிராமெர்
அனுமதி வாங்காது என் அறைக்குள் நுழையும் சிட்டுக்குருவி
கொலுசு ஸப்தம்
கனகாம்பரம்
விடை தெரியாத கேள்விகள்
தாவணி போட்ட பெண்
மூக்குத்தி
காகித கப்பல்
மை பூசிய இருட்டு
அழகான பெண்ணின் அலட்டல்
தண்ணி ஜடை
பாசை புரியாத சினிமா
குழந்தையின் அம்மண படம்
தயிர்சோறு
கடுகு
தெரு நாய் (பெயர் மணி)
எலுதப்படாத காகிதம்
கற்பூரத்தின் கெமிஸ்ட்ரி
முருங்கைகாய் சாம்பார்
மண் பானை தண்ணிர்
வாசலில் கோலம்
ஸ்டவ்வின் ஃப்ளு ஃபிலேம்
விசிலடிக்கும் குக்கர்
கடைசி பக்கம் கிழிந்துபோன கிரைம் நாவல்
மொட்டை மாடியில் டின்னர்
தென்னை ஓலை
ரூபாய் நோட்டில் காந்தி படம்
சப்தம் போடும் டவுன் பஸ்
ஜன்னலோர இருக்கை
இளமையில் நரை
கர்பிணி பெண்ணின் நடை
கஸ்துரி மஞ்சள்
அமாவாசை
கொட்டாங்குட்சி
தாஜ்மஹல்
சின்ன குழந்தையின் பஞ்சுப் பாதங்கள்
ட்யூப் லைட்
காய்கறி கடையில் பேரம்
க்ரீஸ் போடத கதவு
கடலை மிட்டாய்
கல்யாணம் முடிந்தபின் வந்து சேரும் அழைப்பிதள்
கஸ்டமான தியரி
வாழ்க்கை